சீனு ராமசாமியின் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' படத்தின் பாடல்.. தமன்னா என்ன செய்தார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ என்ற திரைப்படம் வரும் 20ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் விளம்பர பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடலை நடிகை தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சீனு ராமசாமி இயக்கிய ’கோழிப்பண்ணை செல்லத்துரை’ படத்தின் ’காத்திருந்தேன்’ என்ற அழகான மெலடி பாடலை பகிர்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்ஆர் ரகுநந்தன் கம்போஸ் செய்த இந்த பாடலை சின்மயி மிகவும் அருமையாக பாடியுள்ளார், இந்த பாடல் என் இதயத்தை தொட்டுவிட்டது, அனைவரும் கேட்டு மகிழ்ச்சியடையுங்கள்’ என்று தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் ஏகன், பிரகிதா, சத்யா, குட்டி புலி தினேஷ், லியோ சிவகுமார், ஐஸ்வர்யா தாத்தா, பவா செல்லதுரை உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் இந்த படம் சீனு ராமசாமியின் மற்றொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Extremely happy to share the beautiful love song #Kaathirundhen from @seenuramasamy #KozhipannaiChelladurai, starring @ActorAegan, @iYogiBabu, @Brigidasagaoffl, and others. This soothing melody composed by @NRRaghunanthan, with heartfelt lyrics by #GangaiAmarab, and sung by the…
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) September 7, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments