கொரோனாவுக்கு பின் தமன்னா வெளியிட்ட 3 நிமிட வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Friday,October 16 2020]

சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை தமன்னா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவில் இருந்து குணமானார் என்ற செய்தி வெளிவந்ததை பார்த்தோம். இருப்பினும் அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்ததால், தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் தற்போது தனிமைப்படுத்தப்படும் காலம் முடிவடைந்த பின்னர் தமன்னா தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார். அவரை அவரது தாயார் மற்றும் தந்தையார் மகிழ்ச்சியுடன் கட்டிப்பிடித்து வரவேற்றனர்.

இதுகுறித்து தமன்னா மூன்று நிமிட வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தற்போது நான் முழுமையாக குணமடைந்து விட்டேன் என்றும் இந்த 14 நாட்கள் நான் எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது என்றும் தற்போது நான் முழு உடல் நலத்துடன் இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் கொரோனாவில் இருந்து மீண்ட பின்னர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை கூறியதாகவும் அதனால் சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு அதன் பின்னர் மீண்டும் பணிகளில் தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமன்னா வெளியிட்ட இந்த 3 நிமிட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

கொயட் பண்ணுடா: 'மாஸ்டர்' படம் குறித்த அனிருத்தின் அதிரடி அறிவிப்பு!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் திரையரங்குகள்

உண்மைக்குப் புறம்பான விஷயங்களையே ஸ்டாலின் தொடர்ந்து பேசுகிறார்… அமைச்சர் காமராஜ் காட்டம்!!!

நெல் கொள்முதல் களநிலவரங்களைத் தெரிந்து கொள்ளாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்

கூண்டுக்குள் அடைக்கப்பட்ட ஷிவானி: கார்னர் செய்யப்படுகிறாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 10 நாட்களாக இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருந்து வந்த ஷிவானிக்கு நேற்று அர்ச்சனா 'அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்' என்ற விருதை கொடுத்து அட்வைஸும் செய்தார்.

யார் யாருக்கு என்ன விருது? அர்ச்சனா அட்வைஸ்க்கு பின் என்ன நடக்கும்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்த அர்ச்சன, அனைத்து போட்டியாளர்களிடம் கலகலப்பாக பேசிவிட்டு பின்னர் 10 நாட்களில் போட்டியாளர்கள் குறித்து மக்கள்

வளர்ந்து வரும் உங்களுக்கு கறை எதற்கு? விஜய்சேதுபதிக்கு கவியரசரின் அறிவுரை

விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான '800' திரைப்படத்திற்கும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது