கொரோனாவுக்கு பின் தமன்னா வெளியிட்ட 3 நிமிட வீடியோ வைரல்!
- IndiaGlitz, [Friday,October 16 2020]
சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை தமன்னா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவில் இருந்து குணமானார் என்ற செய்தி வெளிவந்ததை பார்த்தோம். இருப்பினும் அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்ததால், தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில் தற்போது தனிமைப்படுத்தப்படும் காலம் முடிவடைந்த பின்னர் தமன்னா தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார். அவரை அவரது தாயார் மற்றும் தந்தையார் மகிழ்ச்சியுடன் கட்டிப்பிடித்து வரவேற்றனர்.
இதுகுறித்து தமன்னா மூன்று நிமிட வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தற்போது நான் முழுமையாக குணமடைந்து விட்டேன் என்றும் இந்த 14 நாட்கள் நான் எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது என்றும் தற்போது நான் முழு உடல் நலத்துடன் இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் கொரோனாவில் இருந்து மீண்ட பின்னர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை கூறியதாகவும் அதனால் சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு அதன் பின்னர் மீண்டும் பணிகளில் தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமன்னா வெளியிட்ட இந்த 3 நிமிட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on InstagramA post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks) on Oct 14, 2020 at 8:09am PDT