கொரோனா பாசிட்டிவ்வை பாசிட்டிவ்வால் வென்ற தமன்னா!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்த நடிகை தமன்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வெளியான செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை தமன்னா தனது சமூக வலை பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெப்தொடர் ஒன்றின் படப்பிடிப்பில் இருந்த தமன்னாவுக்கு திடீரென கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மருத்துவரின் வழிகாட்டுதலின்படி சிகிச்சை பெற்ற அவர் தற்போது முழுமையாக குணமாகி வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது.
"நானும் எனது படக்குழுவினர்களும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்தபோதிலும், துரதிர்ஷ்டவசமாக கடந்த வாரம் லேசான காய்ச்சலுக்கு ஆளானேன். அப்போது கொரோனா சோதனைகளை மேற்கொண்டபோது நான் கோவிட் -19 பாசிட்டிவ் என கண்டறியப்பட்டேன். இதனால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் பராமரிப்பில் இருந்த நான் தற்போது குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.
மேலும் டிஸ்சார்ஜ் ஆனபோதிலும் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று தமன்னா தெரிவித்துள்ளார்.
எதையும் பாசிட்டிவ்வாக எடுத்து கொள்ளும் மனப்பான்மையுடைய தமன்னா, கொரோனா பாசிட்டிவ்வையும் தனது பாசிட்டிவ் எண்ணத்தின் மூலம் வென்றுள்ளதாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) October 5, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout