பிரபல தமிழ் நடிகைக்கு கெளரவ டாக்டர் பட்டம்

  • IndiaGlitz, [Monday,July 24 2017]

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாகவும், பாலிவுட் திரையுலகிலும் கால்பதித்து தனது முத்திரை நடிப்பை வெளிப்படுத்தி வரும் தமன்னா, 'பாகுபலி' படத்திற்கு பின்னர் உலக அளவில் பிரபலமாகி பிசியான நடிகையாகி உள்ளார். தற்போது விக்ரமின் 'ஸ்கெட்ச்' உள்பட மூன்று திரைப்படங்களில் தமன்னா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தமன்னாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. Confederation of International Accreditation commission' என்ற அமைப்பின் சார்பில் தமன்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சந்தோஷமான தகவலை தமன்னா தனது நண்பர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக பகிர்ந்துள்ளார்.

15 வயதிலேயே 'கல்லூரி' படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்த தமன்னா, கடந்த 12 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பதை அடுத்து அவருக்கு இந்த கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

2006ல் வெளியான கேடி' படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்த தமன்னா, கடந்த 11 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பதை அடுத்து அவருக்கு இந்த கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.