தந்தையர் தினத்தில் தமன்னா வெளியிட்ட தரமான வீடியோ!

  • IndiaGlitz, [Monday,June 22 2020]

ஜூன் 21-ஆம் தேதி ஆகிய நேற்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் தந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தந்தையின் பெருமைகளை கூறி வந்தனர். பல நடிகர் நடிகைகள் தந்தையால் தான் தாங்கள் இந்த நிலைக்கு வந்ததாகவும் தங்களுக்கு தந்தை ஒரு இன்னொரு கடவுள் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் தந்தையர் தினத்தையொட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் தமன்னாவின் தந்தை ’தந்தையர் தினத்திற்காக கேக் வெட்டுவதும் அருகில் இருக்கும் தமன்னா தந்தை கேக் வெட்டும்போது கை தட்டுவதுமான காட்சிகள் உள்ளன

தமன்னாவின் தந்தையை இதுவரை பல ரசிகர்கள் பார்த்திராத நிலையில் இந்த வீடியோவை பார்த்து தமன்னா வெளியிட்ட வீடியோக்களிலேயே இதுதான் தரமான வீடியோ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். தந்தையுடன் தமன்னா இருக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

கொரோனா வதந்திக்கு க்யூட்டான வீடியோ மூலம் பதிலளித்த நயன்தாரா-விக்னேஷ் சிவன்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தனிமைப்பட்டுள்ளதாக நேற்று ஒரு சில ஊடகங்களில் வதந்திகள் வெளியாகின.

கொளுத்துங்கடா: நள்ளிரவு 12 மணிக்கு வெளியான 'மாஸ்டர்' போஸ்டர்

தளபதி விஜய்யின் பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகம் முழுவதும் தளபதி விஜய்யின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

சீனாவை திட்டியது போதும்... வுஹானுக்கு முன்பே கொரோனா வைரஸ் இந்த நாட்டிலும் இருந்தது: கொளுத்திப் போட்ட புதுத்தகவல்!!!

சீனாவின் வுஹான் நகரத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் அனைத்து மூலை முடுக்குகளில்

வந்துவிட்டது கொரோனாவுக்கு புதிய சிகிச்சை மருந்து: இந்திய மருந்து நிறுவனம் சாதனை!!!

கொரோனா சிகிச்சைக்கு இந்தியாவில் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட மருந்து எதுவும் அறிவிக்கப் படாமல் இருந்தது. இந்நிலையில் கிளென்மார்க் என்ற நிறுவனம் கொரோனாவின்

நாளை வெளியாகிறது விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ: அதிரடி அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாளை அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடி வருவது தெரிந்ததே. ஜூன் 22ஆம் தேதி மட்டுமின்றி ஜூன் மாதம் முழுவதுமே