தமன்னாவின் சொத்து மதிப்பில் 5ல் ஒரு பங்கு கூட காதலரிடம் இல்லையா? ஆச்சரிய தகவல்..!
- IndiaGlitz, [Tuesday,June 13 2023]
நடிகை தமன்னா, நடிகர் விஜய் வர்மா என்பவரை காதலிப்பதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் அவருடைய சொத்து மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கு கூட அவருடைய காதலரிடம் இல்லை என்பது ஆச்சரியத்தக்க தகவலாக உள்ளது.
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான தமன்னா ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற வெப் தொடரில் தன்னுடன் நடித்த விஜய் வர்மா என்பவரை காதலிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐதராபாத்தை சேர்ந்த விஜய் வர்மா பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் ’பிங்க்’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகிய அவர் அதன் பின்னர் ஒரு சில படங்களில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமன்னாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.110 கோடி என்று கூறப்படும் நிலையில் விஜய் வர்மாவின் சொத்து மதிப்பு சுமார் 17 கோடி மட்டுமே என்று தெரிய வருகிறது. பொதுவாக நடிகைகள் தங்களை விட பணக்கார தொழிலதிபர்களை மட்டுமே திருமணம் செய்து வரும் நிலையில் தமன்னா காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னை விட குறைவான சொத்து மதிப்புள்ள நபரை திருமணம் செய்ய உள்ளார். இதனை அடுத்து பணத்தை விட காதலுக்கு மரியாதை கொடுத்த அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.