தமன்னாவின் 'காவாலா' பாடலின் டான்ஸ்.. காதலர் விஜய் வர்மாவின் கமெண்ட் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,July 10 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'ஜெயிலர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் மிகப்பெரிய சாதனை செய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக இந்த படத்தில் தமன்னாவின் டான்ஸ் குறித்து பல பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதும் அவரது டான்ஸை போலவே பல திரை உலக பிரபலங்கள் டான்ஸ் ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சமீபத்தில் தமன்னா, தான் விஜய் வர்மா என்ற நடிகரை காதலித்து வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்று கூறப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ‘காவாலா’ பாடலில் தமன்னாவின் டான்ஸ் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் வர்மா ஒரு பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் தமன்னாவின் டான்ஸ் குறித்த ஒரு ஸ்க்ரீன்ஷாட்டை பதிவு செய்துள்ள விஜய் வர்மா, ‘This song is fireeeee Cinema god and goddess' என்று பதிவு செய்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.