நீங்க தான் இந்தியாவின் ஷகிரா.. ரசிகர் பகிர்ந்த வீடியோ பார்த்து அசந்துபோன தமன்னா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் ஷகிரா நீங்கள்தான் என்று தமன்னா குறித்து ரசிகர் ஒருவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து தமன்னா அசந்து போய் தனது கருத்தை தெரிவித்துள்ளார்
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’காவாலா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலில் தமன்னா அசத்தலாக நடனமாடி இருந்தார் என்பதும் இந்த நடனத்தை பார்த்து சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடனமாடும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான உலகப்புகழ் பெற்ற பாடகி ஷகிரா கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் நடனமாடிய ’வக்கா வக்கா’ என்ற பாடலை தமன்னாவின் ’காவாலா’ நடனத்துடன் இணைத்து ரசிகர் ஒருவர் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இந்த வீடியோவை பார்த்து அசந்து போன தமன்னா உண்மையில் இந்த இணைப்பு மிகவும் அழகாக இருக்கிறது என்று கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் என்பதும் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமன்னாவின் இந்த பதிவுக்கு ’உண்மையாகவே இந்தியாவின் ஷகிரா தமன்னா தான்’ என்று பலர் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.
Have to admit the sync is pretty good 😉 https://t.co/3hogKqrLuz
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) July 9, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com