சிம்பு படத்தில் நடிக்க்கும் தமன்னா-ஸ்ரேயா கேரக்டர்கள்.

  • IndiaGlitz, [Friday,September 09 2016]

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு வித்தியாசமான மூன்று வேடங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் இந்த படத்தின் ஒரு நாயகியான ஸ்ரேயா, மதுரை மைக்கேல் கேரக்டருக்கு ஜோடியாக கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். இவரது காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் மெயின் நாயகியாக சமீபத்தில் இணைந்துள்ள தமன்னா, சென்னை கிளாமர் பெண் கேரக்டரில் நடித்து வருவதாகவும், இவரது காட்சிகளின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் மூன்றாவது நாயகியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த தகவல் மிக விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
தந்தை மற்றும் இரு மகன்கள் என மூன்று கேரக்டர்களில் சிம்பு நடித்து வரும் இந்த படத்தை மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.