தமன்னாவின் மன அழுத்தத்தை குறைப்பது எது தெரியுமா?
- IndiaGlitz, [Saturday,November 23 2019]
தென்னிந்திய திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட் திரை உலகிலும் கால் வைத்து கடந்த பல வருடங்களாக முன்னணி இடத்தில் இருந்து வருபவர் நடிகை தமன்னா. இவர் சமீபத்தில் விஷாலுடன் நடித்த ’ஆக்சன்’ திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.
இந்த நிலையில் திருச்சியில் தனியார் நகை கடை திறப்பு விழா ஒன்றில் நடிகை தமன்னா கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது ’திரைத்துறையில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு எப்போதும் இருந்ததில்லை என்றும், வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து திரைத்துறையில் நீடித்து பயணிக்கவே தான் விரும்புவதாகவும், தெரிவித்தார்.
மேலும் தனக்கு மன அழுத்தம் வரும் போதெல்லாம் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் குறித்து தினமும் வரும் மீம்ஸ்களை பார்த்து ரசிப்பதாகவும் அதன் மூலம் தனக்கு மன அழுத்தம் குறைந்துவிடும் என்றும் தெரிவித்தார்.
மேலும் தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த தமன்னா ’நீங்களே ஒரு நல்ல மாப்பிள்ளையைத் தேடி கொடுங்கள்’ என்று செய்தியாளர்களை பார்த்து நகைச்சுவையாக பதிலளித்தார்.