பொண்ணுன்னு சொல்லிக்கிட ஒரு லட்சணமாவது இவகிட்ட இருக்கா? தமன்னாவின் அடுத்த பட டிரைலர்

  • IndiaGlitz, [Tuesday,September 06 2022]

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னாவின் அடுத்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமன்னா முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் ‘பப்ளி பவுன்சர்’. இந்த படம் வரும் 23ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளது. தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டிரைலரை நடிகை தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் நடிகை தமன்னா ஒரு பெண் பவுன்சராக நடித்துள்ளார் என்பதும் அவரது போல்டான நடிப்பு மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமன்னாவின் அடுத்த வெற்றிப் படமாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மது பந்தார்கர் இயக்கத்தில் தனிஷ்க் பக்சி மற்றும் கரண் மல்ஹோத்ரா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை வினித் ஜெயின் மற்றும் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.