ரசிகரை தள்ளிவிட்ட பவுன்சர்கள் .. தமன்னாவின் மனிதாபிமான செயல்..!

  • IndiaGlitz, [Sunday,August 06 2023]

தன்னை சந்தித்து செல்பி எடுக்க வந்த ரசிகரை தமன்னாவின் பவுன்சர்கள் தள்ளிவிட்ட நிலையில் தமன்னா மனிதாபிமானமாக நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சினிமா நட்சத்திரங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அவர்களை பார்க்கவும் செல்பி எடுத்துக் கொள்ளவும் ரசிகர்கள் முண்டியடிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதே நேரத்தில் சினிமா நட்சத்திரங்களை நெருங்க விடாமல் பவுன்சர்கள் பாதுகாப்புடன் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை தமன்னா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த போது பவுன்சர்கள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அப்போது பவுன்சர்கள் பாதுகாப்பையும் மீரி ஒரு இளைஞர் தமன்னாவிடம் சென்று அவருடைய கையை பிடித்து செல்பி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது பவுன்சர்கள் அந்த இளைஞரை பிடித்து தள்ளிய போது தமன்னா அவர்களை கடிந்து கொண்டதோடு அந்த ரசிகரை அருகே வரவழைத்து அவருக்கு செல்பி எடுக்க போஸ் கொடுத்தார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் தமன்னாவின் மனிதாபிமானத்தை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.