தமன்னாவின் முதல் மலையாள திரைப்படத்தின் பூஜை: ஹீரோ யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,September 01 2022]

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் நடித்த பிரபல நடிகை தமன்னா நடிக்கும் முதல் மலையாள திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

பிரபல மலையாள நடிகர் திலீப் நடிக்கும் 147 வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த படத்தில் திலீப் ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளார் என்பதும் இதுதான் இவரது முதல் மலையாள படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற பூஜையில் திலீப், தமன்னா உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். சாம் சிஎஸ் இசையில் உருவாகயிருக்கும் இந்த படத்தை அருண்கோபி இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

ரஜினியின் 'சிவாஜி' பட நடிகர் இறந்துவிட்டதாக வதந்தி: வழக்கு தொடரப்போவதாக அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'சிவாஜி' படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் சுமன் என்பதும் இவர் பல தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து உள்ளார் என்பதும் தெரிந்ததே.

ரிலீஸ் ஆன மறுநாளே 'கோப்ரா' குழுவினர் எடுத்த அதிரடி முடிவு: பயன் இருக்குமா?

விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள 'கோப்ரா' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது

மகாலட்சுமியே எனக்கு மனைவியாக கிடைத்துள்ளார். தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன்

தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் நடிகை ஒருவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சிலிண்டர் விலை ரூ.91.50 குறைந்தும் இல்லத்தரசிகள் அதிருப்தி: ஏன் தெரியுமா?

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் என்பதும் அந்த வகையில் இன்று சிலிண்டர் விலை குறைப்பு குறித்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த 'ஜெயிலர்' நடிகர்!

தனுஷின் அடுத்த திரைப்படமான 'கேப்டன் மில்லர்'  திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வரும் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.