மீண்டும் படுக்கையறை காட்சியில் தமன்னாவின் வருங்கால கணவர்.. இந்த முறை சிக்கியது தனுஷ் ஹீரோயின்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை தமன்னா மற்றும் அவரது வருங்கால கணவர் விஜய் வர்மா ஆகிய இருவரும் ’லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ’என்ற ஓடிடி தளத்தில் வெளியான வெப் தொடரில் மிகவும் கிளாமராக நடித்திருந்தார்கள் என்பதும் குறிப்பாக இருவருக்கும் ஆன படுக்கை அறை காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் தற்போது விஜய் வர்மா நடித்துள்ள அடுத்த ஓடிடி வெப் தொடர் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த தொடரில் தனுஷ் உடன் ‘அட்ராங்கி ரே’ படத்தில் நடித்த சாரா அலிகான் உடன் விஜய் வர்மா படுக்கை அறையை கட்சியில் நடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் வர்மா, சாரா அலிகான், பங்கஜ் திரிபாதி, கரிஷ்மா கபூர், டிம்பிள் கபாடியா உள்பட பலர் நடித்த ‘மர்டர் முபாரக்’ என்ற வெப் தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்த தொடரின் கதை என்னவெனில் டெல்லியில் உள்ள ஒரு பெரிய குடும்பத்தினரின் பாட்டியில் மர்மமான முறையில் ஒருவர் மரணம் அடைந்து விடுகிறார். அந்த மரணத்தை விபத்து என அந்த பெரிய குடும்பத்தினர் சொல்லி தப்பிக்க முயற்சி செய்தபோது தான் காவல்துறை அதிகாரி பங்கஜ் திரிபாதி அது விபத்து அல்ல கொலை என கண்டுபிடித்து விசாரணை நடத்துகிறார். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் திருப்பங்கள் நடக்கிறது என்பதுதான் இந்த வெப் தொடரின் கதை.
விஜய் வர்மா நாயகனாகவும் சாரா அலிகான் நாயகியாகவும் நடித்துள்ள இந்த தொடரில் லிப் லாக் முத்தக்காட்சி, படுக்கையறை காட்சி, காமெடி மற்றும் கலகலப்பான காட்சிகளுடன் திரில்லர் டிடெக்டிவ் தொடராக உருவாகியுள்ளது. தமிழ் உட்பட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இந்த தொடர் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி இருக்கும் நிலையில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
குறிப்பாக இந்த தொடரில் உள்ள விஜய் வர்மா மற்றும் சாரா அலிகான் படுக்கையறை காட்சி தான் பரபரப்பாக பேசப்படுகிறது. படுக்கையறை காட்சியில் சாராவுடன் எப்படி நடிப்பது என்று தயங்கிக் கொண்டிருந்த நிலையில் சாரா தன்னுடைய கதாபாத்திரத்தின் வலிமையை புரிந்து கொண்டு மிகச் சிறந்த அளவில் ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார் என்று விஜய் வர்மா சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com