ராம்சரண் தேஜா கொடுத்ததாக கூறப்படும் வைர மோதிரம்.. தமன்னா விளக்கம்..!

  • IndiaGlitz, [Friday,July 28 2023]

நடிகை தமன்னாவுக்கு பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா மனைவி உபாசனா வைர மோதிரம் பரிசளித்ததாக செய்திகள் வெளியான நிலையில் இதற்கு தமன்னா விளக்கம் கொடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவை சேர்ந்த வைர வியாபாரி மகள் தமன்னா என்பதும் அவர் திரையுலகில் சாதிக்க வேண்டும் என்பதற்காகவே சினிமாவில் நடிக்க வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்தில் நடித்ததற்காக இந்த படத்தின் தயாரிப்பாளரான சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் மனைவி உபாசனா விலை உயர்ந்த வைர மோதிரத்தை தமன்னாவுக்கு பரிசாக கொடுத்ததாகவும் இதுதான் உலகின் ஐந்தாவது பெரிய வைரம் என்றும் இந்த வைரத்தின் மதிப்பு ரூபாய் 2 கோடி என்றும் கூறப்பட்டது.

ஆனால் இது குறித்து நடிகை தமன்னா தற்போது விளக்கம் அளித்துள்ளார். எனது கையில் இருப்பது வைரம் அல்ல, அதில் பாட்டில் ஓப்பனர், எனக்கு ராம்சரண் மனைவி வைரம் பரிசளித்ததாக தவறான செய்தி பரவுகிறது என்றும் அது முழுக்க முழுக்க வதந்தி என்று குறிப்பிட்டுள்ளார்.