மும்பை விமான நிலையத்தில் 'காவாலா' பாட்டுக்கு டான்ஸ் ஆடிய தமன்னா.. செம்ம வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,July 12 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடலில் தமன்னாவின் கிளாமர் டான்ஸ் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பதையும் பார்த்தோம்.

ஏற்கனவே தமன்னாவே சமீபத்தில் ‘காவாலா’ டான்ஸ் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது மும்பை விமான நிலையத்தில் பத்திரிகையாளர் ஒருவர் விருப்பத்திற்கு ஏற்ப சில இந்த பாடலின் சில ஸ்டெப்ஸ்க்கு நடனம் ஆடியுள்ளார்.

மேலும் அந்த பத்திரிகையாளரை பார்த்து அவர் தன்னைவிட நன்றாக நடனமாடுகிறார் என்றும் கூறினார். அப்போது அந்த பத்திரிகையாளர் ரஜினி போல் கண்ணாடியை ஸ்டைலாக அணிந்ததை பார்த்து தமன்னா அசந்து போய் அவருக்கு பாராட்டு தெரிவித்தார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் ‘காவாலா’ பாடல் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இந்த பாடலுக்கு நடனமாடும் வீடியோக்களும் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன் லால், தமன்னா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ’ஜெயிலர்’ திரைப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார் என்பதும் அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

17 வருடங்களில் 100 படங்கள்.. ஜிவி பிரகாஷின் 100வது படத்தில் மாஸ் கூட்டணி..!

தமிழ் திரையுலகின் இசை அமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ் கடந்த 2006 ஆம் ஆண்டு வசந்த பாலன் இயக்கிய 'வெயில்' என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நிலையில்

ஒரு கட் இல்லை, ஒரு மியூட் இல்லை.. மிஷ்கின் அடுத்த படத்தை பாராட்டிய சென்சார் அதிகாரிகள்..!

பிரபல இயக்குனர் மிஷ்கின் தற்போது திரைப்படங்களை இயக்குவதை விட திரைப் படங்களில் நடிப்பதில் பிஸியாக உள்ளார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ'

அரசியலில் களமிறங்கும் முன் ஒரு அரசியல் படம்.. விஜய் தேர்வு செய்த பிரமாண்ட இயக்குனர்..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் 'தளபதி 69' படத்திற்கு பின்னர் மூன்று ஆண்டுகள் விஜய் நடிக்க மாட்டார் என்றும் அவர் அரசியல் பணிகளில் தீவிரமாக களமிறங்க உள்ளார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

'16 வயதினிலே' படத்தின் தயாரிப்பாளர் மறைவு.. பாரதிராஜா இரங்கல்..!

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி உள்பட பலர் நடித்த '16 வயதினிலே' என்ற திரைப்படம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்ஏ ராஜ்கண்ணு காலமானார். அவரது

ஆண் உறுப்பை அறுத்து மருத்துவ மாணவர் தற்கொலை… பதற வைக்கும் காரணம்?

தெலுங்கானா மாநிலத்தில் மருத்துவம் பயின்றுவரும் மாணவர் ஒருவர் தனது ஆணுறுப்பை அறுத்துக்கொண்டு கொடூரமாக தற்கொலை செய்துகொண்டுள்ளர்