இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து கூறிய பிரபல நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலியாவில் மகளுருக்கான உலக கோப்பை டி20 போட்டி நடைபெற்று வந்தது தெரிந்ததே. இந்த போட்டியின் இறுதிப்போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முதன்முதலாக தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை காண உலகமே பெரும் ஆவலுடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று நடைபெறும் இறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற வேண்டும் என இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர், சேவாக் உள்பட பலர் தங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் திரையுலக பிரபலங்களும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் இந்திய மகளிர் அணிக்கு பிரபல நடிகை தமன்னா தனது சமூக வலை பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாட தனது வாழ்த்துக்கள் என்று, இந்திய பெண்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்பதை இந்த போட்டியில் மீண்டும் நிரூபணம் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் தமன்னாவின் வாழ்த்துக்கு திரையுலக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் கெளர் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மகளிர் அணி கேப்டன் பிறந்தநாள், மகளிர் தினம் ஆகிய இரண்டு முக்கிய தினமான இன்று இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் பெற்றால் மிகப்பெரிய பெருமை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
Goood luck to Team India for the #T20WorldCup finals!! ????
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) March 8, 2020
Jeetega bhai jeetega India Jeetega! ❤️
More power to you wonderful women! You make us proud!! pic.twitter.com/hMKStKloIR
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout