'ஜெயிலர்' படத்தில் தமன்னாவின் கேரக்டர் இதுவா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நிலையில் இந்த படத்தில் நான்கு முக்கிய நட்சத்திரங்கள் இணைந்தனர் என்றும், அவர்கள் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் விநாயகன் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் தமன்னா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. தமன்னா இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா? அல்லது வேறு ஏதேனும் கேரக்டரில் நடிக்கிறாரா? என்று கூறப்பட்ட நிலையில்  தற்போது தமன்னா கேரக்டர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது 

இந்த படத்தில் தமன்னா ஒரு சிறிய கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடிக்க இருப்பதாகவும் அவர் ரஜினியின் மகள் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அவரது காட்சிகள் பிளாஷ்பேக்கில் மட்டுமே வரும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து தமன்னா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது 

அப்படி என்றால் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது உண்மையா? என்ற கேள்வியும் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


 

More News

துருவ் விக்ரமை கட்டிப்பிடித்த இளம்பெண் யார்? வைரலாகும் வீடியோ

 நடிகர் துருவ் விக்ரமை கட்டி பிடித்த இளம்பெண் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது 

கருணாஸ் நடித்த 'ஆதார்' ரிலீஸ் தேதி அரிவிப்பு!

நடிகர் கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்த 'ஆதார்' என்ற படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 'காபி வித் காதல்' படத்தின் 'நாளைய பொழுது' பாடல்: மயக்கும் குரலுக்கு சொந்தக்காரர் யார்?

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான  'காபி வித் காதல்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

சிம்புவின் வெந்து தணிந்தது காடு: ரிலீசுக்கு 20 நாட்கள் இருக்கும் நிலையில் தொடரும் படப்பிடிப்பு!

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த 4 நட்சத்திரங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் அதிகாரபூர்வமாக தொடங்கியது என்பது தெரிந்ததே. ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில்,