'ஜெயிலர்' படத்தில் தமன்னாவின் கேரக்டர் இதுவா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நிலையில் இந்த படத்தில் நான்கு முக்கிய நட்சத்திரங்கள் இணைந்தனர் என்றும், அவர்கள் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் விநாயகன் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் தமன்னா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. தமன்னா இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா? அல்லது வேறு ஏதேனும் கேரக்டரில் நடிக்கிறாரா? என்று கூறப்பட்ட நிலையில் தற்போது தமன்னா கேரக்டர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது
இந்த படத்தில் தமன்னா ஒரு சிறிய கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடிக்க இருப்பதாகவும் அவர் ரஜினியின் மகள் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அவரது காட்சிகள் பிளாஷ்பேக்கில் மட்டுமே வரும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து தமன்னா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது
அப்படி என்றால் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது உண்மையா? என்ற கேள்வியும் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Thalaivar In JAILER Shotting Spot ????#Jailer pic.twitter.com/YHkqCOx7CZ
— Sathish???? (@Sathish8151) August 22, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com