'ஜெயிலர்' படத்தில் தமன்னா கேரக்டர் இதுவா? அதனால் தான் 'காவாலா' பாடலா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது என்பதும் அதில் ரஜினிகாந்த் உட்பட படக்குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை தமன்னா நடித்த கேரக்டர் குறித்த தகவல் கசிந்து உள்ளது. இந்த படத்தில் தமன்னா தெலுங்கு நடிகையாக நடித்துள்ளதாகவும் அதனால்தான் ‘காவாலா’ என்ற தமிழ் மற்றும் தெலுங்கு சொற்கள் கலந்த பாடல் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ரஜினிக்கு ஜோடியாக இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளதாகவும் ரஜினியுடன் ஒரு சில காட்சிகளில் மட்டுமே தமன்னா நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com