close
Choose your channels

இந்தி ரீ-எண்ட்ரிக்கு தமன்னாவுக்கு கை கொடுத்த தோழன்

Saturday, July 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தமன்னா தற்போது பிசியாக உள்ளார். அவர் நடித்து முடித்த 'தர்மதுரை' விரைவில் வெளியாகவுள்ள நிலையில் பிரபுதேவாவுடன் நடித்த 'தேவி படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும் விஷாலுடன் 'கத்திச்சண்டை' மற்றும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
தென்னிந்தியாவில் பிசியாக இருந்தாலும் தமன்னாவுக்கு பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் அதிகம். அவர் நடித்த Humshakals என்ற பாலிவுட் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் அப்போதைக்கு பாலிவுட் ஆசையை தள்ளி வைத்த தமன்னாவுக்கு தற்போது மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு தோழன் மூலம் கிடைத்துள்ளது.
ஆம், தமிழ், மற்றும் தெலுங்கில் சக்கைபோடு போட்ட 'தோழா' படத்தின் இந்தி ரீமேக்கிலும் தமன்னா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பெற்றுள்ள கரண்ஜோகர், 'தோழா' படத்தில் தமன்னாவின் நடிப்பை பார்த்து இந்தியிலும் அவரே நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். இந்த படம் தமன்னாவின் பாலிவுட் எண்ட்ரிக்கு பொருத்தமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment