'அரண்மனை 4' படத்தில் போட்டி.. ராஷி கண்ணாவை வீட்டிற்கு அழைத்து தமன்னா செய்த தரமான செயல்..!
- IndiaGlitz, [Monday,June 24 2024]
சமீபத்தில் வெளியான ’அரண்மனை 4’ திரைப்படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது. மேலும் இந்த படம் கடந்த வாரம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான நிலையில் இதிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகிய இரண்டு முக்கிய நடிகைகள் நடித்திருந்த நிலையில் இருவருக்கும் இடையே படப்பிடிப்பின் போது சில பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் சுந்தர் சி தனது பேட்டியில் இதனை மறுத்து, ‘இரண்டு அழகான நடிகைகளை வைத்து ஒரு படத்தை இயக்குவது கொஞ்சம் சிரமம் தான், ஆனால் இருவருக்கும் இடையே இந்த படத்தில் ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்தது’ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா இடையே மன வருத்தம் ஏற்பட்டதாக வதந்தி வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் இந்த வதந்தியை நீக்கும் வகையில் நடிகை தமன்னா, ராஷி கண்ணாவை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
மேலும் தமன்னா இது குறித்து கூறிய போது ’எனக்கும் ராஷி கண்ணாவுக்கும் ’அரண்மனை 4’ படத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றும், ஆனால் அதே நேரத்தில் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.