சினிமாவுக்கு மட்டும் தான் இந்த பெருமை உண்டு.. தமன்னாவின் வித்தியாசமான 'அரண்மனை 4' விளம்பரம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை 4’ படம் இன்னும் நான்கு நாட்களில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் முழு வீச்சில் சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
சுந்தர் சி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா உள்பட பலர் நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நட்சத்திரங்களும் புரமோஷன் பணிகளில் கலந்து கொண்டு வருகின்றனர் என்பதும் நேற்று கூட ஹைதராபாத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகிய இருவரும் கலந்து கொண்ட புகைப்படம் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் சினிமா குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ள தமன்னா சினிமாவுக்கு மட்டும் ஒரு பெருமை ஒன்று என்று தெரிவித்துள்ளார். என்னை பொருத்தவரை நாம் சினிமாவை மட்டுமே ஒரு கம்யூனிட்டியாக பார்க்க முடியும். சினிமாவுக்கு நண்பர்கள் கூட செல்லலாம், அண்ணன் தங்கை கூட செல்லலாம், பெற்றோர்கள் கூட செல்லலாம், லவ்வர் கூட செல்லலாம் .
அந்த மாதிரி ஒரு அனுபவம் இருக்கும் போது ஒரு திரைப்படத்தை முழுவதுமாக என்ஜாய் பண்ண வேண்டும் என்றால் ஒரு நல்ல என்டர்டெயினர் அந்த படத்தில் இருக்க வேண்டும். அப்படி ஒரு படம் தான் ‘அரண்மனை 4’. எனவே அனைவரும் திரையரங்குகளில் இந்த படத்தை பாருங்கள் என கூறியுள்ளார்.
‘அரண்மனை 4’ படத்தின் வித்தியாசமான இந்த விளம்பர வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
.@tamannaahspeaks about #Aranmanai4 & the film is hitting on May 3rd!pic.twitter.com/3K5errJrZ3
— KARTHIK DP (@dp_karthik) April 29, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com