கபடி கோச் ஆக தமன்னா நடிக்கும் திரைப்படம் 

  • IndiaGlitz, [Saturday,September 28 2019]

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக இருந்து வரும் தமன்னா நடிப்பில் ’சைரா நரசிம்மரெட்டி’, ‘பெட்ரோமாக்ஸ்’ மற்றும் ‘ஆக்சன்’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. மேலும் அவர் நடித்த தெலுங்கு படமான ’தட் இஸ் மகாலட்சுமி’ என்ற படமும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில்தான் தற்போது ’பெங்கால் டைகர்’ என்ற தெலுங்கு பட இயக்குனர் சம்பத் நந்தி என்ற இயக்குனரின் இயக்கத்தில் ஒரு தெலுங்கு படத்தில் தமன்னா நடித்து வருகிறார் இந்த படத்தில் அவர் கபடி கோச்சராக நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது உறுதி செய்துள்ளார்.

விளையாட்டுத்துறையில் கோச்சாக இருப்பது என்பது ஒரு மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயம். அப்படி ஒரு ரோல் எனக்கு கிடைக்கும்போது அதை நான் பெருமையாகக் கருதி ஏற்றுக்கொண்டேன். இந்த கேரக்டர் என்னுடைய மனதிற்கு பிடித்த ஒரு கேரக்டர் என்று கூறினார்.

மேலும் இந்த கேரக்டரில் இயல்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக தமன்னா கபடி பயிற்சி எடுத்து வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர். ஏற்கனவே தமிழில் கபடி விளையாட்டு குறித்து பல திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ள நிலையில் தெலுங்கில் வெளியாகி வரும் இந்த கபடி படமும் நல்ல வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இதுவும் உங்கள் திட்டத்தின் ஒரு பகுதியா? கவினிடம் கமல் கேள்வி

பிக்பாஸ் வீட்டில் இருந்து ரூ.5 லட்சத்தை பெற்று கொண்டு வெளியேறிய கவின், இன்று கமல்ஹாசனுடன் சந்திக்கும் நிகழ்வு நடக்கவிருப்பதை ஏற்கனவே பார்த்தோம்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவது யார்?

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கவின் வெளியேறினாலும் இந்த வாரம் வழக்கமாக ஒரு நபர் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறவுள்ளார்.

'சைரா நரசிம்மரெட்டி' படத்தில் இணைந்த கமல்ஹாசன்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த 'சைரா நரசிம்மரெட்டி' என்ற பிரமாண்டமான திரைப்படம் வரும் அக்டோபரில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது

மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து ரூபாய் ஐந்து லட்சத்தை பெற்றுக்கொண்டு சமீபத்தில் வெளியேறிய கவின், முதல் வேலையாக தனது தாயாரை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே எடுத்துள்ளார்

ரூ.18 ஆயிரம் அபராதம்: தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர்

மோட்டார் வாகன புதிய சட்டத்தின்படி போக்குவரத்து சாலை விதிகளை மீறுவோருக்கும், முறையான ஆவணங்கள் இல்லாத வாகன ஓட்டிகளுக்கும் பெரிய தொகை அபராதம் விதிக்கப்பட்டு