கபடி கோச் ஆக தமன்னா நடிக்கும் திரைப்படம் 

  • IndiaGlitz, [Saturday,September 28 2019]

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக இருந்து வரும் தமன்னா நடிப்பில் ’சைரா நரசிம்மரெட்டி’, ‘பெட்ரோமாக்ஸ்’ மற்றும் ‘ஆக்சன்’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. மேலும் அவர் நடித்த தெலுங்கு படமான ’தட் இஸ் மகாலட்சுமி’ என்ற படமும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில்தான் தற்போது ’பெங்கால் டைகர்’ என்ற தெலுங்கு பட இயக்குனர் சம்பத் நந்தி என்ற இயக்குனரின் இயக்கத்தில் ஒரு தெலுங்கு படத்தில் தமன்னா நடித்து வருகிறார் இந்த படத்தில் அவர் கபடி கோச்சராக நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது உறுதி செய்துள்ளார்.

விளையாட்டுத்துறையில் கோச்சாக இருப்பது என்பது ஒரு மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயம். அப்படி ஒரு ரோல் எனக்கு கிடைக்கும்போது அதை நான் பெருமையாகக் கருதி ஏற்றுக்கொண்டேன். இந்த கேரக்டர் என்னுடைய மனதிற்கு பிடித்த ஒரு கேரக்டர் என்று கூறினார்.

மேலும் இந்த கேரக்டரில் இயல்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக தமன்னா கபடி பயிற்சி எடுத்து வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர். ஏற்கனவே தமிழில் கபடி விளையாட்டு குறித்து பல திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ள நிலையில் தெலுங்கில் வெளியாகி வரும் இந்த கபடி படமும் நல்ல வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.