பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்கிறாரா தமன்னா? வைரலாகும் வதந்தி

  • IndiaGlitz, [Sunday,May 03 2020]

தென்னிந்திய திரையுலகம் மட்டுமின்றி பாலிவுட் திரையுலகிலும் நடித்து வரும் தமன்னா, இதுவரை திருமணம் குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்காத நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் என்பவரை தமன்னா திருமணம் செய்யவிருப்பதாக பரவி வரும் வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமன்னா மற்றும் அப்துல் ரசாக் ஆகிய இருவரும் நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் நகை வாங்குவது குறித்த புகைப்படம் வெளியானது. இந்த புகைப்படத்தை வைத்து இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் திருமணத்திற்கு தேவையான நகைகளை இருவரும் சேர்ந்து வாங்குவதாகவும் வதந்தியை யாரோ கிளப்பிவிட்டனர். இந்த வதந்தி தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது

இவ்வளவிற்கு அப்துல்ரசாக் ஏற்கனவே ஆயிஷா என்ற பெண்ணை திருமணம் செய்தவர் என்பதும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வதந்தியால் அப்துல்ரசாக் குடும்பத்திலும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே தமன்னா ஒரு அமெரிக்க டாக்டரை திருமணம் செய்யவிருப்பதாக வதந்திகள் கிளம்பியது என்றும் இந்த வதந்திக்கு தமன்னா மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கோயம்பேடு சந்தையால் 119 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: 

சமீபத்தில் சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு நான்கு நாட்கள் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் நான்கு நாட்களுக்குரிய காய்கறிகள், மளிகைப்பொருட்களை

கொரோனா அச்சம்!!!10 ஆயிரம் சிறை கைதிகளை வீட்டிற்கு அனுப்பிய பிலிப்பைன்ஸ்!!!

கொரோனா பரவல் தடுப்புக்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

வடதுருவ ஓசோன் படலத்தில் இருந்த ஓட்டை தானாக மூடிக்கொண்டது!!! அறிவியல் காரணங்கள் என்ன???

மனிதர்கள் ஏற்படுத்திய கடுமையான மாசுபாட்டால் பூமியின் வடதுருவத்தில் உள்ள ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய ஓட்டையை உண்டாகியிருந்தது.

இன்றும் 200க்கும் மேல் தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையில் எத்தனை பேர்?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமாகவும் நேற்று 200க்கும் அதிகமாகவும் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று தமிழகத்தில் 231 பேர்களுக்கு புதியதாக கொரோனா தொற்று

இதுதாண்டா மரண மாஸ்க்!

சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து கொண்டே இருப்பதால் தகுந்த காரணம் இல்லாமல் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்றும் அத்தியாவசிய காரணத்தால் வெளியே வந்தால்