திருமணம் குறித்து தமன்னாவின் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,August 09 2019]

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா நடித்த 'கண்ணே கலைமானே' மற்றும் 'தேவி 2' ஆகிய இரண்டு தமிழ்ப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகின. மேலும் அவர் தற்போது 'சயிர நரசிம்மரெட்டி', பெட்ரோமாக்ஸ், விஷால்-சுந்தர் சி படம் உள்பட ஒருசில படங்களில் பிசியாக உள்ளார்.

இந்த நிலையில் தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாகவும், அவர் தனது காதலருடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. இதனை மறுத்துள்ள தமன்னா, தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும், தனக்கு பொருத்தமான மணமகனை தனது தாயார் தேடி வருவதாகவும், சரியான நபர் கிடைத்தவுடன் திருமணம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு பின்னரும் தமன்னா தனது நடிப்பை தொடர்வாரா? என்பதே அவரது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது

கடந்த 2006ஆம் ஆண்டு 'கேடி' என்ற படத்தில் தமிழில் அறிமுகமான தமன்னா, அதன்பின் கடந்த 13 வருடங்களாக அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது