சிரஞ்சீவி-ராம்சரண் தேஜா படத்தில் தமன்னா?

  • IndiaGlitz, [Sunday,September 20 2015]

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ராம்சரண்தேஜாவின் அடுத்த படம் 'புரூஸ்லீ'. இந்த படத்தின் படப்பிடிப்பு விருவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராம்சரண் தேஜாவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரித்திசிங் நடித்து வரும் இந்த படத்தில் பிரம்மானந்தம், நதியா, அருண்விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் ராம்சரண் தேஜாவின் தந்தையும் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவி, இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியிலும், சண்டைக்காட்சியிலும் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வந்த நிலையில், தற்போது நடிகை தமன்னாவும் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் தமன்னா இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'புரூஸ்லீ' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட தன்னிடம் இதுவரை யாரும் அணுகவில்லை என்றும், இது பொய்யான தகவல் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த பாடலில் நடனம் ஆட இலியானாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக படக்குழுவினர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஷாருக்கான் படத்தில் 'பாகுபலி' ஒளிப்பதிவாளர்

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்து வரும் 'தில்வாலே (Dilwale) திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது...

சிவகாமி ரம்யாகிருஷ்ணனின் கிரிக்கெட் அவதாரம்?

எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' படத்தின் கம்பீரமான ராஜாமாதா சிவகாமி கேரக்டரில் அற்புதமாக நடித்து பெயர் வாங்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன்....

3D-யில் விஜய்யின் 'புலி'?

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து சென்சாரும் செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்....

11 வித்தியாசமான கெட்டப்பில் 'காஷ்மோரா' கார்த்தி?

மெட்ராஸ், கொம்பன் வெற்றி படங்களை அடுத்து கார்த்தி தற்போது நாகார்ஜுனனுடன் 'தோழா' மற்றும் நயன்தாராவுடன் 'காஷ்மோரா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்....

விஜய்-அஜீத்தை பின்னுக்கு தள்ளினாரா பிரசாந்த்?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் முதல் படமான 'ஜெண்டில்மேன்' படத்தில் இருந்து 'காதலன்', 'இந்தியன்', 'ஜீன்ஸ்' மற்றும் முதல்வன்' ஆகிய படங்களில் அவருக்கு உதவியாளராக இருந்தவர் இயக்குனர் மாதேஷ்...