கைபிடித்தபடி ஊர்சுற்றும் நடிகை தமன்னா- விஜய் வர்மா ஜோடி… செம வைரலான புகைப்படங்கள்!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை தமன்னா மற்றும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா இருவரும் காதலித்து வருகின்றனர் என்பதும் இவர்கள் அவ்வபோது ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர் என்பதும் ரசிகர்கள் அறிந்ததுதான். இந்நிலையில் மும்பை சாலைகளில் இருவரும் ஒன்றாக வலம்வரும் சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை தமன்னா தற்போது பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ‘லஸ்ட் ஸ்டோரி 2’ ஆந்தலாஜி திரைப்படத்தில் நடிகர் விஜய் வர்மாவிற்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்த நிலையில் இந்த ஜோடிகள் குறித்த தகவல்கள் தற்போது ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
தெலுங்கு சினிமாவில் அறிமுகமான நடிகை தமன்னா கடந்த 18 வருடங்களுக்கு மேலாக தமிழ், தெலுங்கு, இந்தி மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் படுக்கை அறை காட்சிகளில் எப்போதும் தலைக்காட்டாத அவர் சமீபத்தில் படுக்கை அறை காட்சிகள் மற்றும் முத்தக் காட்சிகளிலும் சலிக்காமல் நடித்து வருகிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் படு ஆச்சர்யத்தை ஏற்படுத்திய அவர் நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் இருப்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடிகை தமன்னாவும் நடிகர் விஜய் வர்மாவும் ஒன்றாக கோவாவில் தங்களுடைய நேரத்தை செலவிட்டு இருந்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் சோஷியல் மிடியாவில் வைரலான நிலையில் இதைத் தொடர்ந்து மும்பை உணவகத்தில் இருவரும் ஒன்றாக சந்தித்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் பேசு பொருளாகின. இதைத் தொடர்ந்து இருவருமே தங்களது காதலை ஒப்புக் கொண்டனர்.
‘லஸ்ட் ஸ்டோரி 2’ திரைப்படத்திற்கு பிறகு முதல் முறையாக நடிகை தமன்னா மற்றும் நடிகர் விஜய் வர்மா இருவரும் மும்பையில் ஒன்றாக காட்சி அளித்துள்ளனர். அப்போது எளிமையான வெள்ளை டிஷர்ட் மற்றும் கருப்பு டெனிம் ஜீன்ஸ் உடையில் நடிகை தமன்னா இருந்தார். கூடவே ஸ்வெர்ஷர்ட் மற்றும் டெனிம் ஜீன்ஸ் அணிந்திருந்த நடிகர் விஜய் வர்மா இருவரும் கூட்டத்தைப் பார்த்தபடியே சிரித்துக் கொண்டு கையைப் பிடித்தபடி நடந்து சென்றுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நெல்சன் திலீபன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடிகை தமன்னா நடித்துள்ளார். இதைத்தவிர அவர் நிகில் அத்வானி இயக்கத்தில் ‘வேதா’ திரைப்படத்தில் இணைந்துள்ளார். இதேபோல நடிகர் விஜய் வர்மா சுஜோய் கோஷ் இயக்கத்தில் திரில்லர் திரைப்படம் ஒன்றில் இணைந்து நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com