ஹாலிவுட் வாய்ப்புக்காக ஆபாச காட்சிகளில் நடித்தேனா? நடிகை தமன்னா விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை தமன்னா நடித்துள்ள வெப் சீரிஸ்களில் அவர் தாறுமாறான ஆபாச காட்சிகளில் நடித்திருந்த புகைப்படங்களும் வீடியோக்களும் கடந்த சில தினங்களாக இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சினிமாவில் தன்னுடைய இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து அவரே அளித்துள்ள விளக்கம் இணையத்தில் மேலும் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை தமன்னா ஒருசில பாலிவுட் சினிமாக்களில் நடித்து வந்த நிலையில் தற்போது வெப் சீரிஸ் பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளார். அந்த வகையில் அவர் நடித்துள்ள ‘ஜீ கர்தா‘ வெப் சீரிஸ் ஜுன் 15 முதல் அமேசான் பிரைம் இணையத்தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகை தமன்னா அளித்திருந்த ஒரு பேட்டியில் தான் நடிக்கும் எந்த சினிமாவிலும் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கருத்து தெரிவித்து இருந்தார். ஆனால் சமீபகாலமாக அவர் நடித்து வரும் வெப் சீரிஸ்களில் லிப் லாக் மட்டுமல்ல, ஆபாசமான படுக்கையறை காட்சிகளிலும் பட்டையை கிளப்பும் அளவிற்கு நடித்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்ககாத ரசிகர்கள் தங்களது வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஃபிலிம் கம்பேனியனுக்கு அளித்திருந்த ஒரு நேர்காணலில் ‘கதைக்கு தேவை என்பதால் அப்படி நடித்தேன். அதில் ஆபாசம் தெரியாது. அதுபோல் கதைக்கு தேவையாக இருந்ததால் முத்த காட்சியிலும் நடித்தேன். ஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற காட்சிகளில் நடிக்கவில்லை‘ என்ற நடிகை தமன்னா விளக்கம் அளித்திருக்கிறர்.
மேலும் 18 வருடங்களுக்குப் பிறகு பிரபலமாக மாறுவதற்கு நான் முயற்சிக்கவில்லை என்றும் இந்திய சினிமாவில் பல்வேறு பரிணாமங்கள் நடந்துள்ளன, இது என்னைத் தடுத்து நிறுத்துவதை நான் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
அருணிமா ஷர்மா இயக்கிய ‘ஜி கர்தா‘ வெப் சீரிஸில் சுஹைல் நய்யார், அன்யா சிங், ஹுசைன் தலால், சயன் பானர்ஜி, மற்றும் தமன்னாவுடன் இணைந்து சம்வேத்னா சுவால்கா, சிமோன் சிங் மற்றும் மல்ஹர் தாக்கர் ஆகியோர் நடித்துள்ளார்.
ஜி கர்தாவை தவிர நடிகை தமன்னா ஆந்தாலஜி வகை வெப் சீரிஸான ‘லஸ்ட் ஸ்டோரி 2’ தொடரிலும் நடித்து வருகிறார். இந்த மாதம் 28 ஆம் தேதி வெளியாக இருக்கும் இது பாலியல் உறவை குறித்து இந்திய பெண்களின் புரிதலை பதிவு செய்திருக்கிறது. இந்த தொடரை சுஜோய் கோஷி இயக்கியுள்ளார். இதன் டிரெய்லர் மற்றும் டீசர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகியது. அதிலும் நடிகை தமன்னா படு கவர்ச்சியாக நடித்திருந்ததைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியை வெளியிட்டு வந்தனர்.
மேலும் நடிகர் விஜய் வர்மாவை நடிகை தமன்னா காதலித்து வருவதாகக் கூறப்படும் நிலையில் அவருடன் இணைந்தே இந்த லஸ்ட் ஸ்டோரி 2 வெப் சீரிஸில் நடிகை தமன்னா நடித்துள்ளார்.
இந்நிலையில் ஹாலிவுட் சினிமாவில் வாய்ப்புத் தேடவோ அல்லது 18 வருடம் கழித்து பிரபலமாகவோ லிப் லாக் காட்சிகளில் நடிக்கவில்லை என்று நடிகை தமன்னா அளித்திருக்கும் விளக்கம் ரசிகர்களிடையே கவனம் பெற்றிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments