லிப் லாக் – வீடியோவிற்குப் பிறகு திருமணம் குறித்து விளக்கம் அளித்த நடிகை தமன்னா!

  • IndiaGlitz, [Tuesday,March 14 2023]

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை தமன்னாவும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் ஒன்றாக டேட்டிங் செய்து வருகின்றனர் என்றும் அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர் என்றும் சமீபகாலமாக வதந்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நடிகை தமன்னா திருமணம் குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்திருக்கிறார்.

நடிகை தமன்னா கடந்த 2005 மார்ச் 4 ஆம் தேதி ‘சாந்த் சா ரோஷன் ஷேஹ்ரா’ எனும் இந்தி சினிமாவில் முதல் முதலாக அறிமுகமானார். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்த அவர் தற்போது 18 வருட சினிமா வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார். இன்றைக்கும் முன்னணி நடிகையாக இருந்துவரும் அவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இணைந்து நடித்து வருகிறார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து ‘ஜெயிலர்’ திரைப்படத்திலும் ’லஸ்ட் 2’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கோவா சென்றிருந்த தமன்னா நடிகர் விஜய் வர்மாவுடன் இணைந்து பார்டி கொண்டாடிய வீடியோ ஒன்று சமூகவலைத் தளங்களில் வெளியாகி கடும் பரபரப்பை கிளப்பியது. அந்த வீடியோவில் பிங்க் நிற உடையணிந்திருந்த நடிகை தமன்னா நடிகர் விஜய் வர்மாவிற்கு முத்தம் கொடுப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் இருவரும் காதலில் இருக்கிறார்கள், விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்பதுபோன்ற வதந்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.

இந்நிகழ்வுக்குப் பிறகு நடிகை தமன்னா முதல் முறையாக திருமணம் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். அதில் “நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறோம். அதற்குள் இதுபோன்ற வதந்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன. இவை அனைத்தையும் தெளிவுப்படுத்துவது அவசியமில்லை. இதற்குமேல் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை” எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் ஒரு நடிகை முன்னணிக்கு வந்தபின்பு தானாகவே அது குறைந்துவிடும் எனும் கருத்து அபத்தமானது. நான் இதுபோதும் என்று ஒருபோதும் என நினைக்கவில்லை. இந்த 18 வருடங்களில் நான் கவனித்த ஒரு விஷயம் சினிமாவை பொருத்த வரையில் நடிகர்களை விட நடிகைகளே அதிக திருமண வதந்தி செய்திகளில் சிக்குகின்றனர். அதற்கு என்ன காரணம் என்பது எனக்கு புரியவில்லை. நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே டாக்டர், தொழிலதிபர் என்று பலருடன் எனக்கு பலமுறை திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர். எனக்கு உண்மையாகவே திருமணம் நடந்தாலும் அதை ரசிகர்கள் நம்புவார்களா எனத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

More News

விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி இதுதான்.. பிரிட்டிஷ் நடிகர் தகவல்..!

 விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்கு பின்னர் சமீபத்தில் தொடங்கியதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.. 50 வயதில் தலைமறைவான காதல் ஜோடி.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என்பது அவ்வப்போது நடக்கும் என்பதும் இந்த சந்திப்பின்போது முன்னாள் மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது மலரும் நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்வார்கள் என்பதும்

தங்கத்தேரே நடந்து வருகுது… வைரலாகும் நேஷனல் கிரஷ் ராஷ்மிகாவின் வீடியோ!

நேஷனல் கிரஷ் என இளைஞர்களால் கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் நடைபெற்ற பேஷன் ஷோ ஒன்றில் கலந்துகொண்டு அசத்தலாக ரேம்ப் வாக் செய்திருந்தார்.

இந்தியா இந்தி நாடு அல்ல.. 'நாட்டு நாட்டு' பாடலுக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ், சிம்பு பட நடிகை..!

இந்தியா என்பது இந்தி நாடல்ல இந்திய திரை உலகம் என்றால் பாலிவுட் திரை உலகம் அல்ல என தனுஷ் படத்தில் நடித்த நடிகை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தில் ராஜூவுடன் படம் பார்த்த சமந்தா.. படம் முடிந்தவுடன் கட்டிப்பிடித்து மகிழ்ச்சி..!

நடிகை சமந்தா தான் நடித்த திரைப்படத்தை இயக்குனர் குணசேகரன் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜுடன் படம் பார்த்துவிட்டு  படம் முடிந்தவுடன் இருவரையும் கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.