close
Choose your channels

ஜீ கர்தா-வில் எதற்கு இவ்வளவு ஆபாசம்? விமர்சனத்துக்கு இடையே நடிகை தமன்னா விளக்கம்!

Wednesday, June 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சினிமாவில் அறிமுகமாகி 18 வருடங்கள் ஆன பிறகும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை தமன்னா சமீபகாலமாக ஆபாசமான காட்சிகள் மற்றும் அந்தரங்க காட்சிகளில் நடித்து வருகிறார். இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத் தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து நடிகை தமன்னா விளக்கம் அளித்திருக்கிறார்.

2005 வெளியான ‘சாந்த் சே ரோசன் செகரா‘ என்ற இந்தி திரைப்படம் மூலம் சினிமாவிற்கு நுழைந்தவர் நடிகை தமன்னா. தமிழில் ‘கேடி’ திரைப்படத்தில் அறிமுகமானாலும் அவருக்கு ‘கல்லூரி’ திரைப்படமே பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என்று பல ஹிட் படங்களில் நடித்துவந்தார். அதேபோல ஒருசில பாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வந்த அவர் தற்போது வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தன்னுடைய காதலரான நடிகர் விஜய் வர்மாவுடன் இணைந்து ‘லஸ்ட் ஸ்டோரி2’ என்ற ஆந்தலாஜி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் 29 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் சில அந்தரங்கமான காட்சிகளில் நடித்துள்ள நடிகை தமன்னாவின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் ‘லஸ்ட் ஸ்டோரி 2’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இவர் நடித்துள்ள ‘ஜீ கர்தா’ வெப் சீரிஸ் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வெப் சீரிஸிலும் நடிகை தமன்னா மோசமான காட்சிகளில் நடித்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் விமர்சனத்தை வெளியிட்டு வரும் நிலையில் அதற்கு நடிகை தமன்னா விளக்கம் அளித்திருக்கிறார். .

‘ஜீ கர்தா’ வில் நடிகை தமன்னா நடிகர் சுஹைல் நய்யாருடன் இணைந்து அந்தரங்க காட்சிகளில் நடித்திருக்கிறார். பிரைம் வீடியோ வெளியிட்டு இருக்கும் இந்தத் தொடரானது பள்ளிப் பருவ காதல் கதையை விளக்குவது போன்று அமைந்திருக்கிறது.

இந்நிலையில் இயக்குநர் அருணிமா ஷர்மா அந்தரங்க காட்சிகளில் நடிக்கும்போது என்னை எளிதாகவும் வசதியாகவும் உணர வைத்தார். பள்ளிப் பருவக் காலத்து காதல் கதையாக இருப்பதால் கதைக்கு இது அவசியமாக இருந்தது. சுஹைல் நய்யாருடன் இருக்கும் உறவை விளக்கவும் கதையோட்டத்தை வலுப்படுத்தவும் இது தேவையாக இருந்தது என்று நடிகை தமன்னா விளக்கம் அளித்துள்ளார்.

‘ஜீ கர்தாவில்’ லாவண்யா என்ற கதாபாத்திரத்தில் நடிகை தமன்னா நடித்துள்ள நிலையில் இவருடன் இணைந்து ஆஷிம் குலாட்டி, சுஹைல் நய்யார், அன்யா சிங், ஹுசைன் தலால், சயன் பானர்ஜி, சம்வேத்னா சுவால்கா ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கதையின் பயணத்தை விவரிப்பதற்கு இந்தக் காட்சிகள் முக்கியமாக இருந்தன என்று நடிகை தமன்னா அளித்திருக்கம் விளக்கம் ரசிகர்களிடையே வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment