வருங்கால கணவரை தான் நடித்த திரைப்படத்திற்கு அழைத்து சென்ற தமன்னா.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Thursday,May 30 2024]

நடிகை தமன்னா தனது வருங்கால கணவரை தான் நடித்த சூப்பர் ஹிட் படத்திற்கு அழைத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சுந்தர் சி இயக்கி நடித்த ’அரண்மனை 4’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தமன்னா மற்றும் ராஷி கண்ணா முக்கிய வேடத்தில் நடித்த இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தமிழ் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ’அரண்மனை 4’ திரைப்படம் ஹிந்தியில் மே 31ஆம் தேதி அதாவது நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பிரிவியூ ஷோ மும்பையில் நடந்தது. இந்த காட்சிக்கு தனது வருங்கால கணவரான நடிகர் விஜய் வர்மாவை தமன்னா அழைத்துச் சென்ற புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இருவரும் நெருக்கமாக ஒருவருக்கொருவர் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு புகைப்பட கலைஞர்களுக்கு போஸ் கொடுத்த நிலையில் இருவரும் மகிழ்ச்சியாக இந்த படத்தை ரசித்து பார்த்ததாகவும் கூறப்படுகிறது. ’அரண்மனை 4’ திரைப்படம் தமன்னாவின் திரையுலக வாழ்வில் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து அவருக்கு தமிழ், தெலுங்கு திரையுலகில் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

காவி உடையுடன் இமயமலையில் ரஜினிகாந்த்.. தேர்தல் ரிசல்ட்டை மறைமுகமாக சொல்கிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் இமயமலை சென்ற நிலையில் தற்போது இமயமலையில் அவர் காவி உடையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதே தயாரிப்பாளர்.. அதே இயக்குனர்.. அஜித்தின் 64வது படம் குறித்த தகவல்..!

அஜித் தற்போது 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' ஆகிய  இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரது அடுத்த படத்தில் இதற்கு முன் அவரை இயக்கிய இயக்குனர்

நீதிமன்றம் வரும்போது ஆவேசமான டிடிஎப் வாசன்.. ஜாமீன் மனு மீது அதிரடி உத்தரவு..!

ஜாமீன் கோரிய டிடிஎப் வாசனின் மனு மீதான விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நடந்த நிலையில் அவருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சினிமாவில் ஹீரோவாகும் 'குக் வித் கோமாளி' பிரபலம்.. சின்னத்திரை குயின் தான் நாயகி..!

சின்னத்திரையில் பிரபலமாகி  அந்த பிரபலத்தின் மூலம் வெள்ளி திரையில் நட்சத்திரங்களாக அறிமுகம் ஆகும் பலர் இதுவரை இருந்துள்ளனர் என்பதை ஏற்கனவே பார்க்கிறோம்

சிவகார்த்திகேயன் வீட்டுக்கு வரும் குட்டி எஸ்கே.. ஃபேமிலி வீடியோ வைரல்..!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது அவருடைய மனைவி மீண்டும் கர்ப்பமாக இருப்பது போன்ற வீடியோ இனி இணையத்தில் வைரல் ஆகி வருவதை