ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட நடிகை தமன்னா… வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை தமன்னா ஒருவருடம் பிசியான படப்பிடிப்புக்கு இடையே தற்போது முதல் முறையாக ஆன்மீகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றிருக்கின்றன.
தமிழில் முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப்படங்களில் நடித்த நடிகை தமன்னா “பாகுபலி“ திரைப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் பிசியான நடிகையாக மாறிவிட்டார். அந்த வகையில் பல வெற்றிப்படங்களில் நடித்துவரும் அவர் இந்தி மொழி சினிமாவிலும் தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இப்படி பல மொழி சினிமாவிலும் தொடர்ந்து நடித்துவரும் நடிகை தமன்னா, தனது அம்மாவுடன் ஜம்மு பகுதியில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் சென்றுள்ளார்.
மேலும் ஒருவருடம் பிசியான படப்பிடிப்பு மற்றும் கடினஉழைப்பிற்கு பிறகு முதல் முறையாக உற்சாகமாக உணருகிறேன் என்று இந்தப் பயணம் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். மனம் நிறைவான இந்தப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு உள்ளார்.
தெலுங்கில் நடிகை தமன்னா Hurtudha seetakalam, F3, Bhola Shankar, That is Mahalakshmi போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதேபோல இந்தியில் Bole Chudiyan, Chor Nital ke Bhaaga போன்ற படங்களிலும் தமிழில் “ஏன்? என்றால் காதல் என்பேன்“, காத்து கருப்பு“ போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments