கொரோனாவை விரட்ட சின்னச்சின்ன விஷயங்களை செய்தால் போதும்: தமன்னா
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது திரையுலக பிரபலங்கள் ஏற்படுத்தி வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா, பார்த்திபன், வரலட்சுமி, உள்பட பல பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் பிரபல நடிகை தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது:
நம் நாட்டில் பரவி வரும் கோவிட் 19 என்ற வைரஸை நாம் எளிதாக விரட்ட முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது சின்ன சின்ன விஷயங்கள் மட்டுமே. நாம் எல்லோருக்கும் தெரியும் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என்பது. இப்போது அதுதான் நமக்கு பாதுகாப்பு. கொரோனா வைரஸிடம் இருந்து நாம் ஒவ்வொருத்தர் பாதுகாப்பாக இருப்பது அவசியம். அது நம்ம கையிலதான் இருக்கு. மேலும் அரசு கூறியபடி அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும். கொரோனா வைரஸிலிருந்து நாம் எல்லோரும் பாதுகாப்பாக இருப்போம்’ என்று கூறியுள்ளார்.
தமன்னாவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
#IndiaFightsCorona:
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) April 4, 2020
Actress @tamannaahspeaks encourages the fellow citizens to #StayHome#StayHomeSaveLives@DDNewslive @PIB_India @MoHFW_INDIA pic.twitter.com/Ld1NUsnN82
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout