வெப்சீரிஸில் வேற லெவல் கிளாமரில் தமன்னா .. பிங்க் பியூட்டியின் வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Friday,June 02 2023]

நடிகை தமன்னா கடந்த 18 ஆண்டுகளாக திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பாக தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் அவரது படங்கள் சூப்பர் ஹிட் ஆகி வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’ஜெயிலர்’ மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் ’அரண்மனை 4’ ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு மலையாள படத்திலும் ஒரு இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை தமன்னா இந்தி வெப் தொடர் ஒன்றில் நடித்து வரும் நிலையில் இந்த தொடரின் டீசர் வீடியோ வெளியாகி உள்ளது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இந்த தொடருக்கு ‘ஜி கர்தா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் அறிமுக வீடியோ சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் தமன்னா பிங்க் காஸ்ட்யூம் அணிந்து செம கிளாமரில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து ‘பிங்க் பியூட்டி’ போன்ற கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமன்னா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த வெப் தொடரில் ஆசிம் குலாட்டி, சுஹைல் நாயர், அன்யா சிங், ஹுசைன் தலால் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அர்னிமா ஷர்மா என்பவரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் ஜூன் 15 முதல் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்நாள் எம்பிக்கு முன்னாள் எம்பி வாழ்த்துகிறேன்.. இளையராஜாவுக்கு வாழ்த்து கூறிய நடிகர்..!

இசைஞானி இளையராஜா இன்று தனது 80 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

'லியோ' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இந்த தேதியிலா? ரசிகர்கள் குஷி..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ்

பேபி பம் புகைப்படத்திற்கு பிறகு 'மோதிர விரல்' புகைப்படம்… நடிகை இலியானாவின் காதலரா இவர்?

தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை இலியானா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்ட

துக்க வீட்டிற்கும் ஆணுறை எடுத்துச் செல்லும் இளைஞர்கள்? என்ன காரணம் தெரியுமா?

அமெரிக்காவின் முன்னணி ஆணுறை நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் இளைஞர்கள் இறப்பு வீட்டிற்குச் செல்லும்போதும் பாதுகாப்புக்காக ஆணுறை எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்

ரூ 190 கோடியில் பங்களா வாங்கிய நம்ம 'லெஜெண்ட்' ஹீரோயின்… சுவாரசியத் தகவல்!

பாலிவுட் சினிமாவில் பேஷன் ஐகான் என்ற பெயருடன் முன்னணி இடம்பிடித்திருக்கும் நடிகை ஒருவர் ஆடம்பர பங்களாவை விலைக்கு வாங்கியுள்ளார்.