ஒரிஜனலை விட நல்லா இருக்கு.. தமன்னா வெளியிட்ட 'காவாலா' நடன வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ என்ற பாடல் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னால் வெளியானது என்பதும் இந்த பாடல் இணையத்தில் 13 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை பெற்று சாதனை செய்துள்ளது என்பதையும் பார்த்தோம். தமன்னாவின் அட்டகாசமான நடனம், ரஜினியின் சூப்பர் ஸ்டைல் ஆகியவை ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் சற்றுமுன் நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘காவாலா’ மாடலுக்கு தனது ஸ்டைலில் ஆடிய வீடியோவை பதிவு செய்துள்ளார்.
’ஒரிஜினலை விட இது நன்றாக இருக்கிறது’ ‘இப்படியே கூட ஆடியிருக்கலாம், அந்த ஹேர்ஸ்டைலை விட இந்த ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கும்’ போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. தமன்னா இந்த வீடியோவை பதிவு செய்து இரண்டு மணி நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் சுமார் ஐந்து லட்சம் லைக் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பில் அனிருத் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.
If you aren’t already Hooked yet, here’s the Hookstep of #Kaavaalaa @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @tamannaahspeaks @Arunrajakamaraj @shilparao11 @AlwaysJani #Jailer #JailerFirstSingle pic.twitter.com/EvDxgYKdUw
— Sun Pictures (@sunpictures) July 8, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com