ரஜினியிடம் இருந்து கிடைத்த மறக்க முடியாத பரிசு.. தமன்னா நெகிழ்ச்சி..!

  • IndiaGlitz, [Thursday,June 08 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் முதன் முதலாக ரஜினியுடன் இணைந்து நடித்த தமன்னா, அவர் கொடுத்த மறக்க முடியாத பரிசு குறித்து நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ்குமார் உட்பட பல பிரபலங்கள் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார் என்பதும் அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை தமன்னா கூறியபோது, ‘ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது பல வருட கனவு என்றும், தற்போது நனவாகியுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் தனக்கு ஆன்மீக புத்தகம் ஒன்றை பரிசாக கொடுத்ததாகவும் அந்த பரிசு மறக்க முடியாத பொக்கிஷமாக பாதுகாத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த புத்தகத்தில் ரஜினிகாந்த் கையெழுத்திட்டு கொடுத்ததாகவும் அவர் பெருமையுடன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ’ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.