த்ரில் பட இயக்குனரின் அடுத்த படத்தில் தமன்னா!

  • IndiaGlitz, [Thursday,March 21 2019]

கலையரசன், ஜனனி ஐயர் நடிப்பில் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கிய த்ரில் படம் 'அதே கண்கள்'. இந்த படம் கடைசி வரை சஸ்பென்ஸுடன் சென்றதால் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ரோஹின் வெங்கடேசனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

'அதே கண்கள்' போலவே ரோஹின் இயக்கவுள்ள அடுத்த படமும் ஒரு திகில் படம்தான். ஏற்கனவே 'தேவி' மற்றும் 'தேவி 2' ஆகிய திகில் படங்களில் நடித்துள்ள நடிகை தமன்னா இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் யோகிபாபு, பகவதி பெருமாள், மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார். இந்த படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.