பள்ளி பாடப்புத்தகத்தில் தமன்னா குறித்து பாடம்.. கொந்தளித்த பெற்றோர்கள்.. என்ன நடந்தது?
- IndiaGlitz, [Thursday,June 27 2024]
பள்ளி பாடப்புத்தகத்தில் தமன்னா குறித்த பாடம் இடம்பெற்றுள்ளதை அடுத்து பெற்றோர்கள் கொந்தளித்த நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுக்க உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக பள்ளி பாட புத்தகத்தில் தேச தலைவர்கள், சுதந்திர போராட்ட தலைவர்கள், அறிஞர்கள், அறிவியல் மேதைகள் உள்ளிட்டவர்களின் வாழ்க்கை வரலாறு தான் பாடமாக வைக்கப்படும். கலைத்துறையில் சேர்ந்த சிலரும் பெரும் சாதனை செய்திருந்தால் அவர்களது பாடமும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் நடிகை தமன்னா குறித்த பாடம் இடம்பெற்றுள்ளதை பார்த்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கொந்தளித்துள்ளனர். தங்கள் குழந்தைகள் எதற்காக தமன்னாவின் பாடத்தை படிக்க வேண்டும் என்று அவர்கள் பள்ளி நிர்வாகிகள் இடம் கேள்வி எழுப்பிய நிலையில் இது குறித்து கல்வி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களின் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், தமன்னாவின் பாடத்தை வைத்த பள்ளி நிர்வாகிகளிடம் உரிய விளக்கம் கேட்கப்படும் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.