'காவலா' பாடலை விட இரு மடங்கு கிளாமர்.. ஆகஸ்ட் 15ல் ரிலீசாகும் படத்தில் தமன்னா ஆட்டம்..!
- IndiaGlitz, [Thursday,July 25 2024]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தில் ’காவலா’ என்ற பாடலுக்கு தமன்னா கிளாமர் டான்ஸ் ஆடிய நிலையில் அதைவிட இருமடங்கு கிளாமர் டான்ஸ் ஆடிய தமன்னாவின் பாடல் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சமீபத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் தமன்னா டான்ஸ் இருந்தால் போதும் என்று கூறினார். அது பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் அதன்பின் அதற்கு அவர் விளக்கமளித்தார்.
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி பாலிவுட் திரையுலகில் வெளியாக இருக்கும் ’ஸ்ட்ரீட் 2’ என்ற திரைப்படத்தில் நடிகை தமன்னா கிளாமர் டான்ஸ் ஆடி உள்ள நிலையில் அந்த பாடலின் வீடியோவை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் பாடலில் தமன்னா, ‘காவாலா’ பாடலை விட இருமடங்கு கிளாமராக இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த படத்தில் தமன்னாவின் பாடல் இடம் பெற்றுள்ளதால் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் தமன்னா மட்டுமின்றி அக்சய்குமார், வருண் தவான் உள்ளிட்டோரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
’ஸ்ட்ரீட் 2’ படத்தில் ஷராதா கபூர், ராஜ்குமார் ராவ் ,பங்கஜ் திரிபாதி, அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.