close
Choose your channels

இரண்டு சிகரங்களுடன் நடித்த தமன்னா.. அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ்..!

Sunday, May 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையுலகில் இரண்டு சிங்கங்களுடன் தமன்னா நடித்த இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆகவுள்ளது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா என்பது தெரிந்ததே. கடந்த 18 ஆண்டுகளில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு உட்பட பல முன்னணி நடிகர்களுடன் தமன்னா கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பதும் அவரது பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தமன்னா நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதேபோல் மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் தமன்னா நடித்த ’போலோ சங்கர்’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமன்னா கூறியபோது, ‘இரண்டு மிகப்பெரிய நடிகர்களுடன் நடிப்பதே மிகப்பெரிய அதிர்ஷ்டம் ஆனால் அந்த படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஹீரோக்கள் நடித்த இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாவது அடிக்கடி நடக்கும், ஆனால் கதாநாயகிகளுக்கு எப்போதாவது தான் நடக்கும், எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இரண்டு சிகரங்கள் போன்ற நடிகர்களுடன் நான் நடித்த படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாவது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment