சின்னத்திரை நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Wednesday,October 09 2024]

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா, ஹிந்தியிலும் சில படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும், அதுபோக வெப் தொடர்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில், தமிழ் சின்னத்திரை நடிகருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இது குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி என்ற தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ராகுல் ரவி, சாக்லேட் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தார். கண்ணான கண்ணே என்ற தொடர் இவரது நடிப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்த நிலையில், தற்போது அவர் மருமகள் என்ற தொடரில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கேப்ரில்லா நாயகியாக நடிக்கும் இந்த தொடரில் TRB எனில் முன்னணி இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை தமன்னாவுடன் இணைந்த எடுத்த புகைப்படத்தை ராகுல் ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து எனது அடுத்த திரைப்படம் தமன்னாவுடன், என்னவாக இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள் என்று பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து, சின்னத்திரை போலவே வெள்ளித்திரையிலும் ராகுல் ரவி ஜொலிக்க வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராகுல் ரவி மற்றும் தமன்னா நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

திரைப்படம் போலவே சின்னத்திரையிலும் 3ஆம் பாகம்.. பிரபல நடிகையின் வைரல் பதிவு..!

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் திரைப்படங்கள் உருவாகி வருகிறது என்பதும் சமீபத்தில் கூட அரண்மனை படத்தின் நான்காம்

பிக்பாஸ் தமிழ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு? இந்த இருவருக்கு மட்டும் அதிகமா?

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் கடந்த ஞாயிறு அன்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. திங்கள் முதல் போட்டியாளர்கள் தங்கள் விளையாட்டை

ஆலயங்களிலும் வழிபாடுகளிலும் இணைந்திருக்கும் தெய்வீக இசை

ஆன்மீக கிளிட்ஸ் சேனலில், இளம் நாதஸ்வர கலைஞர் ஜெகதீஸ்வரன் அவர்கள் நாதஸ்வர இசையின் அழகைப் பகிர்ந்து கொண்டார்.

'சும்மா அதிருதில்ல.. பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் கலக்கும் தமிழ் பொண்ணு..!

பிக் பாஸ் தமிழ் மற்றும் தெலுங்கு ஒரு பக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், பிக் பாஸ் தமிழ் ஆரம்பித்த அதே நாளில் பிக் பாஸ் ஹிந்தி 18வது சீசன் ஆரம்பித்தது

சாச்சனாவின் வெளியேற்றத்திற்கு உண்மை காரணம் இதுதானா? மீண்டும் ரீஎண்ட்ரி?

பிக் பாஸ் சீசன் 8 கடந்த ஞாயிறு அன்று பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் ஆரம்பித்த நிலையில் 24 மணி நேரத்தில் போட்டியாளர்களில் ஒருவரான சாச்சனா வெளியேற்றப்பட்டது,