இந்தியாவின் போர் ஹெலிகாப்டரை வசப்படுத்திய தாலிபான்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் அந்நாட்டு இராணுவத்திற்கும் இடையிலோன போர் முற்றிக்கொண்டே வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆப்கனில் இருந்த அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதை தங்களது சாதகமாக்கிக் கொண்ட தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தில் உட்கார்ந்து கொள்வதற்காக நாடு முழுவதும் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள 65% பகுதிகள் தற்போது தாலிபான்கள் வசம் சென்றுவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று கந்தகரையும் வசப்படுத்தி உள்ளனர். கந்தகரைத் தொடர்ந்து காபூல் மீது தாக்குதல் துவங்கிவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதைத்தவிர தெற்கு ஆப்கானிஸ்தானில் போலீஸ் தலைமைச் செயலகத்தையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் மாகாண தலைநகரங்களில் உள்ள ராணுவத் தலைமை இடங்கள் சிலவற்றையும் கைபற்றியுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த ஆப்கன் மக்களும் உயிர்க்கு பயந்து வேறு இடங்களுக்கு குடிப்பெயர்ந்து வருவதும் அதிகரித்து இருக்கிறது. மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் தங்களது உடைமைகளை விட்டுவிட்டு பாதுகாப்புக் கருதி காபூலுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கிய Mi-24 அட்டாக் டெலிகாப்டரையும் அவர்கள் கைப்பற்றியுள்ளதாகப் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. கண்டூஸ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ ஹெலிகாப்டரை சுற்றி தற்போது தாலிபான்கள் நிற்பதுபோன்ற புகைப்படத்தில் ஹெலிகாப்டரின் ரோட்டர்(இறக்கைகள்) இன்றி காணப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு வழங்கிய இந்த அட்டாக் ஹெலிகாப்டர் Mi-24 தற்போது தாலிபான்கள் வசம் சென்றிருப்பதைப் பார்க்கும்போது ஆப்கானிஸ்தான் மக்களின் நிலைமை கேள்விக்குறியாகி இருக்கிறது. இதனால் உலகத் தலைவர்களை நோக்கி அந்நாட்டு பிரபலங்கள் சிலர் உதவிக்கோரி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Video reportingly shows #Taliban captured Kunduz airport with #Afghanistan Air Force Mi-35 Hind attack helicopter pic.twitter.com/u7jZJdR800
— Joseph Dempsey (@JosephHDempsey) August 11, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments