ஆசை தான் நம்ம லைஃபை தீர்மானிக்கின்றது.. சித்தார்த்தின் 'டக்கர்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Sunday,May 21 2023]

சித்தார்த் நடித்த ‘டக்கர்’ என்ற திரைப்படம் வரும் ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சித்தார்த் ஜோடியாக திவ்யான்ஷா நடித்துள்ள இந்த படத்தில் முதல் முறையாக இரண்டு வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். மேலும் அபிமன்யு சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ் காந்த், உள்பட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.பல வருடங்களாக சித்தார்த்தை ஒரு ரொமான்ஸ் நாயகனாகவே பார்த்து வந்த ரசிகர்களுக்கு அதிரடி ஆக்சன் படத்திற்கும் சித்தார்த் பொருந்துவார் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் கிரிஷ் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படம் சித்தார்த்துக்கு வெற்றி படமாக அமையுமா என்பதை பார்ப்போம். இந்த படத்தின் டிரைலர்கள் இடம்பெற்ற சில அதிரடி வசனங்கள் இதோ:

ஆசைதான் இந்த உலகத்தையே இயக்கிக் கொண்டிருக்கிறது, நம் ஆசை எதுவோ அதுதான் நம்ம லைஃபை தீர்மானிக்கின்றது, அந்த ஆசையை தீர்த்துக்க பணம் தான் எல்லோருக்கும் தேவை, அதை சம்பாதிக்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வழி இருக்கு, அந்த வழி ,எல்லோருக்கும் ஒண்ணாகும்போது..

காசு சம்பாதிப்பேன்னு சொல்லு, ஆனால் பணக்காரன் ஆகப்போறேன்னு சொன்னா லேசா பயமா இருக்குடா தம்பி

அதுக்கு வேணும்னா எங்க அப்பனே கல்யாணம் பண்ணிக்கோ, நல்லா காட்டுவான்...

நூடுல்ஸ் சாப்பிடுற உனக்கே இவ்வளவு இருந்தா, கொத்து புரோட்டா சாப்பிடுற எனக்கு எவ்வளவு இருக்கும்?

More News

'பிளான் பண்ணி தான் 2000 ரூபாய் நோட்டை தடை பண்ணியிருக்காங்க: விஜய் ஆண்டனி..

 பிளான் பண்ணி தான் 2000 ரூபாய் நோட்டை அரசு தடை செய்துள்ளார்கள் என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

'தளபதி 68' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இயக்குனர், இசையமைப்பாளர் பெயரை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 68 வது திரைப்படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று மூலம் தெரிவித்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி

ரஜினி-ஞானவேல் படத்தின் கதை இதுவா? உண்மை சம்பவம் என தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 170 வது திரைப்படத்தை 'ஜெய்பீம்' இயக்குனர் ஞானவேலு இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது

ரூ.100 கோடி வசூல் செய்த சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனருடன் மீண்டும் சிவகார்த்திகேயன்..?

ரூ.100 கோடி வசூல் செய்த சிவகார்த்திகேயன் படத்தை இயக்கிய இயக்குனருடன் அவர் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த அருண்ராஜா காமராஜ்.. என்ன பணி செய்துள்ளார் தெரியுமா?

தனுஷ் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் புதிதாக தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இணைந்துள்ளதாக வெளிவந்திருக்கும்