தாஜ்மஹால் என்னுடையது, மதுரை மீனாட்சி கோவில் உங்களுடையது: கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் வட இந்தியாவில் ’விக்ரம்’ படத்தின் புரமோஷனின் போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ’தாஜ்மஹால் என்னுடையது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உங்களுடையது’ என்று பதிலளித்துள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’விக்ரம்’. இந்த படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் ’விக்ரம்’ படத்தின் புரமோஷன் பணிக்காக நாடு முழுவதும் கமலஹாசன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் வட இந்தியாவில் ’விக்ரம்’ படத்தின் புரமோஷனின்போது, வட இந்தியா மற்றும் தென்னிந்தியா பேதம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது, ‘நான் ஒரு இந்தியன்! எனக்கு வட இந்தியா தென்னிந்தியா என்ற பேதம் கிடையாது. தாஜ்மஹால் என்னுடையது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உங்களுடையது. கன்னியாகுமரி எந்த அளவுக்கு உங்களுக்கு சொந்தமோ, அதே போல் காஷ்மீர் எனக்கு சொந்தம்’ என்று கூறியுள்ளார். அவருடைய இந்த பதில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments