தாஜ்மஹாலில் இனி 3 மணி நேரம் மட்டுமே! சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக அதிசங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்வையிட இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதுண்டு. காதலின் சின்னமான தாஜ்மஹாலை பார்வையிட தற்போது இந்திய தொல்பொருள் ஆய்வகம் புதிய நிபந்தனையை விதித்துள்ளது.
அதாவது வரும் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க ஒவ்வொரு சுற்றுலா பயணிக்கும் மூன்று மணி நேரம் மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவு டிக்கெட்டில் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் அதில் இருந்து மூன்று மணி நேரத்திற்குள் தாஜ்மஹாலை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தினமும் காலை சூரிய உதயத்திற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு நுழைவுச்சீட்டு அறை திறக்கப்பட்டு, சூரியன் மறைவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு மூடப்படும் என்றும் இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க ஏப்ரல் 1 முதல் நுழைவு கட்டணம் ரூ.40-ல் இருந்து ரூ.50-ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பதும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு ரூ.400ல் இருந்து ரூ.1,250-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments