தாஜ்மஹாலில் இனி 3 மணி நேரம் மட்டுமே! சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு

  • IndiaGlitz, [Thursday,March 29 2018]

உலக அதிசங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்வையிட இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதுண்டு. காதலின் சின்னமான தாஜ்மஹாலை பார்வையிட தற்போது இந்திய தொல்பொருள் ஆய்வகம் புதிய நிபந்தனையை விதித்துள்ளது.

அதாவது வரும் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க ஒவ்வொரு சுற்றுலா பயணிக்கும் மூன்று மணி நேரம் மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவு டிக்கெட்டில் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் அதில் இருந்து மூன்று மணி நேரத்திற்குள் தாஜ்மஹாலை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தினமும் காலை சூரிய உதயத்திற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு நுழைவுச்சீட்டு அறை திறக்கப்பட்டு, சூரியன் மறைவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு மூடப்படும் என்றும் இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க ஏப்ரல் 1 முதல் நுழைவு கட்டணம் ரூ.40-ல் இருந்து ரூ.50-ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பதும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு ரூ.400ல் இருந்து ரூ.1,250-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஒரு படத்தை ஓடவைக்க முடியாதவரெல்லாம் ரஜினியை விமர்சிக்கலாமா? பிரபல நடிகர்

கோலிவுட் திரையுலகில் இருந்து கமல்ஹாசன் உள்பட பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்து அரசியலில் நுழைந்தபோது தோன்றாத எதிர்ப்பு ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு மட்டும் கிடைத்துள்ளது

வேங்கை மகனாக மாறிய டெட் பூல் - தமிழ் ட்ரைலர் விமர்சனம்

ரயன் ரெனோல்ட்ஸ் நடிப்பில் செம ரகள காமடி படமாக வந்த டெட் பூல் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தின் ட்ரைலர் வெளியாகி

பந்தை சேதப்படுதிய விவகாரம் குறித்து சச்சின் கருத்து

சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேதப்படுத்திய வீரர் மீதும்,

கமல்ஹாசனின் முதல் அரசியல் போராட்ட தேதி அறிவிப்பு

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் மதுரையில் கட்சி ஆரம்ப பொதுக்கூட்டம், பின்னர் சென்னையில் மகளிர் தின பொதுக்கூட்டம் ஆகிய இரண்டு கூட்டங்களை முடித்துவிட்டார்.

விமான விபத்தில் உயிர் தப்பிய பிரபல நடிகை

கடந்த 1990கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ரோஜா. ரஜினியுடன் உழைப்பாளி, வீரா போன்ற படங்களிலும் மற்றும் பால் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடிகை ரோஜா ஜோடியாக நடித்துள்ளார்.