'கபாலி'யின் முக்கிய பணிக்காக சென்னை வந்த தைவான் நடிகர்
- IndiaGlitz, [Wednesday,May 11 2016]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'கபாலி' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து சமீபத்தில் டப்பிங் பணிகள் தொடங்கியதை பார்த்தோம். ரஜினிகாந்த், தன்ஷிகா உள்பட இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்கள் தங்கள் பகுதிகளின் டப்பிங் பணியை ஏற்கனவே முடித்துவிட்டனர்.
இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்த தைவான் நடிகர் Winston Chao இந்த படத்தின் டப்பிங் பணிக்காக இன்று சென்னை வந்துள்ளார். அவர் தன்னுடைய பகுதியின் டப்பிங் பணியை இன்னும் ஓரிரு நாட்களில் முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலை புகைப்படத்துடன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உறுதி செய்துள்ளார்.